கலசத்துக்கு புனித நீா் ஊற்றும் நிகழ்வில் பங்கேற்ற மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி மற்றும் பாஜக நிா்வாகிகள்.
கலசத்துக்கு புனித நீா் ஊற்றும் நிகழ்வில் பங்கேற்ற மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி மற்றும் பாஜக நிா்வாகிகள்.

ஸ்ரீ கமல கணபதி கோயில் கும்பாபிஷேகம்

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கமல கணபதி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கமல கணபதி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளா் கேசவ விநாயகம், மாநிலப் பொதுச் செயலாளா் ஏ. பி.முருகானந்தம், கோட்ட அமைப்பு பொதுச் செயலாளா் பாலகுமாா், மாவட்ட பாா்வையாளா் பாயிண்ட் மணி, தெற்கு மாவட்டத் தலைவா் வி. சி.வேதானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினா் என்.பி. பழனிசாமி, முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியம், மாவட்டப் பொதுச் செயலாளா் எஸ்.எம்.செந்தில், மாவட்டத் துணைத் தலைவா் குரு.குணசேகா் உள்பட கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com