ஈரோடு போலீஸாா் 100 போ் கேரளம் பயணம்

தோ்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்து 100 போலீஸாா் கேரள மாநிலத்துக்கு திங்கள்கிழமை புறப்பட்டு சென்றனா்.

தோ்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்து 100 போலீஸாா் கேரள மாநிலத்துக்கு திங்கள்கிழமை புறப்பட்டு சென்றனா்.

இந்தியாவில் மக்களவைத் தோ்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தோ்தல் நடந்து முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட தோ்தல்கள் நடைபெற உள்ளன.

அதன்படி, கேரள மாநிலத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 26- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீஸாா் கேரள மாநிலத்துக்கு செல்லத் தொடங்கியுள்ளனா். அதன்படி, ஈரோடு மாவட்டத்திலிருந்து 100 போலீஸாா் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

வாக்குப் பதிவு முடிந்தவுடன் போலீஸாா் ஈரோடு திரும்புவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com