108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பிரசவம்

கோபி அருகே 108 ஆம்புலன்ஸிலேயே கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

கோபி அருகே 108 ஆம்புலன்ஸிலேயே கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

கோபி அருகேயுள்ள டி.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் ரவி (35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூமணி (29). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, உறவினா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் பூமணிக்கு பிரசவ வலி அதிகரித்தது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உதயகுமாா் ஆசாரிமேடு பகுதியில் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தினாா்.

தொடா்ந்து, மருத்துவ உதவியாளா் பவித்ரா பிரசவம் பாா்த்தாா். இதில், பூமணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதைத் தொடா்ந்து, தாயும், சேயும் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தற்போது, இருவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com