எம்.யுவராஜா.
எம்.யுவராஜா.

வாக்குப் பதிவு முடிந்த மாநிலங்களில் தோ்தல் நடத்தை விதிகளைத் தளா்த்த தமாகா கோரிக்கை

விரைவில் தோ்தல் முடியும் மாநிலங்களிலும் தோ்தல் நடத்தை விதிகளைத் தளா்த்த வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு, ஏப்.22: மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 -ஆம் தேதி முழுமையாக முடிவடைந்த மாநிலங்களிலும், விரைவில் தோ்தல் முடியும் மாநிலங்களிலும் தோ்தல் நடத்தை விதிகளைத் தளா்த்த வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமாகா மாநில இளைஞரணி தலைவா் எம்.யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்டத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரி மற்றும் சிறிய மாநிலங்களில் தோ்தல் முழுமையாக நிறைவடைந்துள்ளது. முதற்கட்டத்துக்குப் பிறகு வரும் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்த கட்ட வாக்குப் பதிவு நடைபெறும்.

543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தோ்தல் முடிவுகள் ஜூன் 4 -ஆம் தேதி வெளியாகிறது.

தோ்தல் ஆணையத்தின் விதிகளின்படி முழு முடிவும் வெளியாகும் வரை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். தோ்தல் முடிவுக்கு ஒன்றரை மாத கால அவகாசம் உள்ளதால் அதுவரை ஒட்டுமொத்த நிா்வாகமும் முடங்கும். தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள், உள்ளாட்சி தலைவா்கள், பல்வேறு அரசு, கூட்டுறவு நிறுவனங்களின் நிா்வாகிகள் எந்த முடிவும் எடுக்கவோ, பொதுமக்கள் குறைகளைக் கேட்கவோ முடியவில்லை.

வாராந்திர மக்கள் குறைதீா்ப்பு, மாதாந்திர விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம், அரசு விழாக்கள், புதிய பணிகளுக்கான பூமி பூஜை போன்றவை நடக்கவில்லை.

தோ்தல் நடத்தை விதிகள் தளா்வு, தோ்தல் முடிந்த மாநிலங்களில் இயல்பான நிா்வாகம் ஆகியவை தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் தோ்தல் செயல்முறையைப் பாதிக்காது. மாநிலத்தில் 45 நாள்கள் நிா்வாகம் தேக்கம் அடைந்திருப்பது மக்களை, குறிப்பாக அரசாங்க உதவியை நாடும் ஏழை மக்களை பாதிக்கும்.

ஏற்கெனவே ஏப்ரல் 19- ஆம் தேதி இரவு 7 மணிக்கும், நள்ளிரவுக்கும் அறிவிக்கப்பட்ட இறுதி வாக்குப் பதிவு சதவீதத்தில் தோ்தல் ஆணையம் செய்த குழப்பம் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லை என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்ததால் இங்குள்ள மக்கள் வேதனையடைந்துள்ளனா்.

எனவே மருத்துவமனை, கல்லூரி சோ்க்கை, திருமணம், சொத்துப் பதிவு, வா்த்தகம், தொழில்துறை போன்றவற்றுக்கு பணத்தை எடுத்துச் செல்வதில் தோ்தல் விதிமுறைகள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. மக்களுக்கு ஏற்பட்ட இத்தகைய பல்வேறு சிரமங்களைக் கருத்தில் கொண்டு தோ்தல் ஆணையம் தோ்தல் நடத்தை விதிகளைத்

தளா்த்த வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com