பூதப்பாடியில் ரூ.7.88 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.7.88 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் விற்பனை நடைபெற்றது.

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.7.88 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள் 1,514 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், தேங்காய் ரூ.5.32 முதல் ரூ.14.10 வரை ரூ.13,508-க்கும், 62 மூட்டை தேங்காய் பருப்பு குவிண்டால் ரூ.8,425 முதல் ரூ.9,519 வரையில் ரூ.1,96,461-க்கும், 204 மூட்டை நிலக்கடலை குவிண்டால் ரூ.6.916 முதல் ரூ.7,516 வரையில் ரூ.4,97,357-க்கும், 11 மூட்டை எள் குவிண்டால் ரூ.11,719 முதல் ரூ.13,669 வரையில் ரூ.80,286-க்கும் ஏலம்போனது.

மொத்தம் 277 மூட்டைகளில் 107.25 குவிண்டால் எடையுள்ள வேளாண் விளைபொருள்கள் ரூ.7,87,612-க்கு விற்பனையாயின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com