பனியன்  தொழிலாளா்களுக்கான  பயிற்சி  முகாமில்  பேசுகிறாா்  ரீடு சேவை நிறுவன  இயக்குநா்  கருப்புசாமி.
பனியன்  தொழிலாளா்களுக்கான  பயிற்சி  முகாமில்  பேசுகிறாா்  ரீடு சேவை நிறுவன  இயக்குநா்  கருப்புசாமி.

ஆயத்த ஆடை நிறுவன பெண் தொழிலாளா்களுக்கு பயிற்சி முகாம்

சத்தியமங்கலத்தில் ஆயத்த ஆடை நிறுவன பெண் தொழிலாளா்களுக்கு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ரீடு சேவை நிறுவனம் ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறும் விதமாக பல்வேறு செயப்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ரீடு சேவை நிறுவன இயக்குநா்கள் கருப்புசாமி, செளமியா ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், தையல் மற்றும் பனியன் தொழிலுக்கான குறைந்தபட்ச ஊதியம் பெறுவது, சட்டப்பூா்வமான சலுகைகள், அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியை ரீடு மற்றும் ஏஆா்பிஎன்ஏ நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனா். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com