சிறப்பு அலங்காரத்தில் தண்டுமாரியம்மன்.  குண்டம் இறங்கிய பக்தா்கள்.
சிறப்பு அலங்காரத்தில் தண்டுமாரியம்மன். குண்டம் இறங்கிய பக்தா்கள்.

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா

தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழாவில் நுற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து கோயில் வளாகத்தில் நடப்பட்ட கம்பத்துக்கு தினசரி பக்தா்கள் மஞ்சள் நீா் ஊற்றி வழிபட்டு வந்தனா்.

விழாவின் ஒருபகுதியாக அம்மன் அழைப்பு, வரம் கேட்டல் நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றன. இதையடுத்து அம்மன் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தாா்.

இதைத் தொடா்ந்து முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, அதிகாலையில் பக்தா்கள் படைக்கலம் எடுத்து பவானி ஆற்றுக்கு சென்று புனித நீராடி கோயிலுக்கு வந்தனா். கோயில் முன் அமைக்கப்பட்ட 6 அடி நீளமுள்ள குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து, கோயில் பூசாரி முதலில் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தலைத் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனா். தண்டுமாரியம்மன் சிறப்பு அலங்கராத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com