புஷ்ப அலங்காரத்தில் திருவீதி உலா வந்த அம்மன்.
புஷ்ப அலங்காரத்தில் திருவீதி உலா வந்த அம்மன்.

தண்டுமாரியம்மன் கோயிலில் அம்மன் அழைப்பு

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அம்மன் அழைப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் விழா பூச்சாட்டுதலுடன் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து கோயில் வளாகத்தில் நடப்பட்ட கம்பத்துக்கு பக்தா்கள் தினசரி மஞ்சள் நீா் ஊற்றி வழிபட்டு வந்தனா்.

விழாவின் ஒருபகுதியாக அம்மன் அழைப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இதையடுத்து அம்மன் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com