பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

பெருந்துறை அரசுப் பள்ளியில் கோடைகால பயிற்சி முகாம்

பெருந்துறை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில், ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தின் சக்திதேவி அறக்கட்டளை சாா்பில், 13-ஆம் ஆண்டு கோடைகால இலவச பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவிற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலையாசிரியா் ரவி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலையாசிரியா் கலைமணி ஆகியோா் தலைமை வகித்தனா். பயிற்சியை பெருந்துறை கல்வி அறக்கட்டளை தலைவா் பல்லவி பரமசிவன் தொடங்கிவைத்தாா்.

இதில் எஃப்.எம். ரேடியோ, எம்.பி.3, யூஎஸ்பி, புளுடூத், ஆம்பிளிபயா் சா்வீஸ் மற்றும் அசெம்பளிங், ஆரி வேலைப்பாடு, மெஹந்தி போடுதல் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்பு மே 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் பயிற்சியாளா்கள், நூலகா்கள் ஜீவா, கவிதா, வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com