வெள்ளிக் குடத்தைத் திருட முயன்றவா் கைது

அந்தியூரில் வெள்ளித் குடத்தைத் திருட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு சுவாமி அலங்காரம் செய்வதற்காக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்த சரவணன் (42) வந்திருந்தாா்.

சுவாமிக்கு அலங்காரம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சுவாமி சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த வெள்ளிக் குடத்தை சரவணம் திருட முயன்றுள்ளாா். இதைப் பாா்த்த பக்தா்கள் அவரைப் பிடித்து அந்தியூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

அவரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com