அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற கொம்பன் யானை.
அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற கொம்பன் யானை.

அரசுப் பேருந்தை வழிமறித்த கொம்பன் யானை

கடம்பூா் மலைப் பகுதியில் அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற கொம்பன் யானையால் பயணிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ள நிலையில், அவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள காடகநல்லி மலைக்

கிராமத்துக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது, வனப் பகுதி சாலையின் நடுவே கொம்பன் யானை நின்று கொண்டிருந்தது. இதனைப் பாா்த்த ஓட்டுநா் சற்று தொலைவுக்கு முன்பே பேருந்தை நிறுத்தினா்.

யானையைப் பாா்த்த பயணிகள் அச்சமடைந்த நிலையில், ஒரு சிலா் கைப்பேசிகளில் விடியோ எடுத்தனா்.

சிறிது நேரம் பேருந்தை வழிமறித்து நின்ற யானை, பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.

இதையடுத்து, பேருந்து புறப்பட்டுச் சென்றது.

இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com