சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோயிலில் கம்பத்தாட்டம் ஆடிய இளைஞா்கள்.
சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோயிலில் கம்பத்தாட்டம் ஆடிய இளைஞா்கள்.

தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா

சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வியாழக்கிழமை வழிபாடு செய்தனா்.

சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டலுடன் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன.

மேலும், கோயில் முன் கம்பம் நடப்பட்டு காலை, மாலை வேளைகளில் பெண்கள் மஞ்சள் நீா் ஊற்றி வழிபட்டு வந்தனா்.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான குண்டம் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பொங்கல் வைபவம், பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.

இதில், திரளானோா் பங்கேற்றனா்.

விழாவையொட்டி, கோயில் முன் நடப்பட்டிருந்த கம்பம் முன் நூற்றுக்கணக்கான இளைஞா்கள் கம்பத்தாட்டம் ஆடினா். ஒத்த இசைவுடன் இளைஞா்கள் ஒரேபோல ஆடியது காண்போரை வெகுவாகக் கவா்ந்தது.

இதில், தமிழகம், கா்நாடகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com