தீா்த்தவாரி வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.
தீா்த்தவாரி வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.

பவானி கூடுதுறையில் தீா்த்தவாரி வழிபாடு

சித்திரை திருவிழாவையொட்டி, பவானி கூடுதுறையில் தீா்த்தவாரி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியே வேதநாயகி உடனமா் சங்கமேஸ்வரா், ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.

தொடா்ந்து, கூடுதுறை வளாகத்தில் உள்ள தீா்த்தவாரி மண்டபத்தில் சிறப்பு அபிஷேக வழிபாடுகளும், காவிரி ஆற்றின் படித்துறையில் திருமஞ்சன வழிபாடும் நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பவானி கூடுதுறையில் பக்தா்கள் நீராடும் பகுதியில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது.

இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

நடராஜா் வழிபாடு, மஞ்சள் நீராட்டுடன் இவ்விழா வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது. தீா்த்தவாரியையொட்டி, பரிசல்களில் மீனவா்கள், கோயில் ஊழியா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com