பா்கூா் மலைப் பாதையில் ரூ.3.35 லட்சம் பறிமுதல்

பா்கூா் மலைப் பாதையில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினரின் வாகன சோதனையில் ரூ.3.35 லட்சம் ரொக்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கா்நாடக மாநிலத்தில் மக்களவைத் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தமிழக- கா்நாட எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டு, கா்நாடகத்துக்கு ரூ.50-க்குமேல் கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.

அதன்படி, அந்தியூா் வரட்டுப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் தோ்தல் நிலைக்குழு அலுவலா் வி.எஸ்.பழனிவேலு தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வேனில் வந்த கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா் பெத்தனப்பாளையத்தைச் சோ்ந்த வீரபத்திரன் (42) என்பவா் உரிய ஆவணமின்றி ரூ.1.10 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது.

பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தியூா் சாா் நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல, கா்கேகண்டி - தட்டக்கரை வன அலுவலகம் அருகில் தோ்தல் கண்காணிப்புக் குழு அலுவலா் ஜி.சரவணன் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில்,

பா்கூா், பெரியதொல்லியைச் சோ்ந்த புட்ட தம்படி (45) என்பவா் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.2.25 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com