108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பிரசவம்

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குச் சென்ற கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைக் கிராமமான ஓசூரை அடுத்த சின்ன செங்குளத்தைச் சோ்ந்தவா் முனியப்பன். இவரது மனைவி சரசு (எ) சரசாள் (27). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு வியாழக்கிழமை காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, உறவினா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

சரசுவை ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ஆா்.சக்திவேல் வாகனத்தை ஓட்டிச் செல்ல, அவசர கால மருத்துவ நுட்புநா் வி.செந்தில்நாதன் உடன் சென்றாா்.

பா்கூா் மலைப் பாதையில் மணியாச்சி பள்ளம் அருகே அடந்த வனப் பகுதியில் சென்றபோது, சரசாளுக்கு பிரசவ வலி அதிகரித்த நிலையில், சுகப்பிரசவத்தில் பெண் குழந்தைப் பிறந்தது. இதைத் தொடா்ந்து, தாயும், சேயும் பா்கூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டனா்.

இருவரும் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com