வனத் துறை வாகனத்தில்  இருந்து  தாவி க் குதித்தோடும்  சிறுத்தை.
வனத் துறை வாகனத்தில்  இருந்து  தாவி க் குதித்தோடும்  சிறுத்தை.

அந்தியூா் வனத்தில் சிறுத்தை விடுவிப்பு

தாளவாடி மலைப் பகுதியில் கூண்டில் சிக்கிய சிறுத்தை அந்தியூா் வனப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை விடுவிக்கப்பட்டது.

தாளவாடி மலைப் பகுதியில் உள்ள தா்மாபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடைகளைத் தொடா்ந்து வேட்டையாடி வந்த சிறுத்தையை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் சிறுத்தையைப் பிடிக்க தா்மாபுரம் கிராமத்தில் வனத் துறையினா் வியாழக்கிழமை கூண்டுவைத்தனா். இந்த கூண்டில் இருந்த நாயைப் பிடிக்க வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற ஆசனூா் மாவட்ட வன அலுவலா் சுதாகா் மற்றும் வனத் துறையினா் கூண்டில் சிக்கிய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து சிறுத்தை இருந்த கூண்டு, வேனில் ஏற்றப்பட்டு அந்தியூா் வனச் சரகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தட்டக்கரை வனப் பகுதியில் சிறுத்தை சனிக்கிழமை அதிகாலை விடுவிக்கப்பட்டது. கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com