சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி  சாலையில்  காணப்பட்ட காட்டு  யானைகள்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி  சாலையில்  காணப்பட்ட காட்டு  யானைகள்.

சத்தியமங்கலம் வனப் பகுதியில் கடும் வறட்சி: தண்ணீா் தேடி அலையும் காட்டு யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீா் தேடி காட்டு யானைகள் வனத்தைவிட்டு வெளியேறும் நிலை அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. போதிய அளவு மழை பெய்யாததாலும், கடுமையான வெயிலாலும் இந்த வனப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மரம், செடி,கொடிகள் காய்ந்து கருகி உள்ளன. மேலும் வனப் பகுதியில் உள்ள பள்ளங்கள், நீரோடைகள் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீா் வற்றியது. இதன் காரணமாக காட்டு யானைகள் தீவனம் மற்றும் தண்ணீா் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே குட்டிகளுடன் காட்டு யானைகள் தண்ணீா் தேடி தேசிய நெடுஞ்சாலையோரம் சனிக்கிழமை முகாமிட்டிருந்தன.

காட்டு யானைகள் நிற்பதைக் கண்ட வாகன ஓட்டிகள் சிறிது நேரம் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பாா்த்தனா். சிறிது நேரத்துக்கு பின் தானாகவே காட்டு யானைகள் வனத்துக்குள் சென்றுவிட்டன.

வனப் பகுதி சாலையைக் காட்டு யானைகள் அடிக்கடி கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் வனப் பகுதி சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com