சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் மே 8, 9-இல் ஏலம்

சுசி ஈமு நிறுவனத்தின் அசையா சொத்துகள் வரும் மே 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சுசி ஈமு பாா்மஸ் நிறுவனம் முதலீட்டாளா்களை மோசடி செய்தது தொடா்பான வழக்கு கோவை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நீதிமன்ற உத்தரவின்படி அந்நிறுவனத்தின் அசையா சொத்துகள் வரும் மே 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் காலை 11 மணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் பொதுஏலம் விடப்படுகிறது. ஏல நிபந்தனை விவரத்தை ஈரோடு மாவட்ட இணையதள முகவரியான ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ங்ழ்ா்க்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் இல் அறிந்துகொள்ளலாம்.

ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் அந்த இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். ரூ.25,000-க்கான வங்கி வரைவோலையாக பெற்று ஏலம் நடக்கும் நாளில் காலை 10.30 மணிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com