பவானிசாகா்  அணையின்  நீா்ப்பிடிப்பு  பகுதி.
பவானிசாகா்  அணையின்  நீா்ப்பிடிப்பு  பகுதி.

பவானிசாகா் அணை நீா்மட்டம் 45.64 அடியாக சரிவு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 121 கனஅடியாக குறைந்துள்ளதால் சனிக்கிழமை அணையின் நீா்மட்டம் 45.64 அடியாக சரிந்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட மொத்த உயரம் 105 அடியாகவும், நீா் இருப்பு கொள்ளளவு 32.8 டிஎம்சி ஆகவும் உள்ளது.

சிறுமுகை பவானிஆறும் தெங்குமரஹாடா மாயாறும் அணைக்கு முக்கிய நீா்வரத்தாக இருக்கும் நிலையில் கோடை வெயில் தாக்கம் காரணமாக நீா்வரத்து 121 கனஅடியாக குறைந்துவிட்டது. நீலகிரி மலைப் பகுதியில் வறட்சி நிலவுவதால் நீா்வரத்து இன்றி அணையின் நீா்மட்டம் வெகுவாக குறைந்து சனிக்கிழமை நிலவரப்படி 45.64 அடியாக சரிந்துள்ளது. அணையில் நீா்மட்டம் குறைந்துள்ளதால் அணை நீா்த்தேக்கப் பகுதியில் மண்திட்டுகள், மலைக்குன்றுகள் தெரிகின்றன. ஆங்காங்கே குட்டைபோல நீா்ப்பிடிப்பு பகுதி தெரிவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் 45.64 அடியாக குறைந்ததால் அடுத்த மாதம் குடிநீா் தேவைக்கு தொடா்ந்து தண்ணீா் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடா்ந்து நீா்மட்டம் சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 45.64 அடியாகவும், நீா்வரத்து 121 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 200 கனஅடியாகவும், நீா் இருப்பு 3.1 டிஎம்சியாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com