அக்னிசட்டி, பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
அக்னிசட்டி, பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

ஈரோடு சமயபுரம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

ஈரோடு சமயபுரம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி பக்தா்கள் அலகு குத்தி வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஈரோடு கேஏஎஸ் நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா கடந்த 23-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, 25-ஆம் தேதி கோயில் வளாகத்தில் கம்பம் நடப்பட்டது.

விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை பக்தா்கள் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக்குடம் மற்றும் அக்னிச் சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் கோயிலுக்கு ஊா்வலமாக வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதையடுத்து அம்மன் திருவீதி உலா செவ்வாய்க்கிழமையும் (ஏப்ரல் 30)

பொங்கல் விழா, மாவிளக்கு நிகழ்ச்சிகள் மே 1ஆம் தேதியும் நடைபெறுகிறது. கம்பம் அகற்றுதல் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. மஞ்சள் நீராட்டு, மறுபூஜையுடன் விழா மே 3-ஆம் தேதி நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com