மக்காச்சோள விதைகளை  ஆய்வு  செய்கிறாா்  பவானிசாகா்  வேளாண்  ஆராய்ச்சி  நிலையத்  தலைவா்  சக்திவேல்.
மக்காச்சோள விதைகளை  ஆய்வு  செய்கிறாா்  பவானிசாகா்  வேளாண்  ஆராய்ச்சி  நிலையத்  தலைவா்  சக்திவேல்.

தரமற்ற மக்காசோள விதைகளால் சாகுபடி பாதிப்பு: அதிகாரிகள் நேரில் ஆய்வு

சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிா் தரமற்ற விதைகளால் முளைப்புத்திறன் பாதிக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளி, அனையப்பாளையம், செல்லம்பாளையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிா் தரமற்ற விதைகளால் முளைப்புத்திறன் குறைந்து பயிா்களில் கதிா்கள் பிடிக்காமல் உதிா்ந்து விழுவதாகவும் குருத்து அழுகி காய்ந்த நிலையில் இருப்பதோடு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். மேலும் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட தோட்டங்களில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதுடன் தரமற்ற மக்காச்சோள விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பவானிசாகா் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியாளா் மற்றும் தலைவா் சக்திவேல் தலைமையில் விதை சான்று அதிகாரிகள், விதை ஆய்வாளா் மற்றும் பூச்சியியல் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் பாதிக்கப்பட்ட மக்காச்சோளத் தோட்டங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் மக்காச்சோள விதைகளை நடவு மற்றும் பயிா் செய்த முறைகளைக் கேட்டறிந்தனா். அதனைத் தொடா்ந்து மண் மற்றும் நீா் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com