மைலம்பாடியில் ரூ.81.29 லட்சத்துக்கு எள் ஏலம்

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 81.29 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு 727 மூட்டைகள் எள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வெள்ளை ரகம் கிலோ ரூ.132.99 முதல் ரூ.147.59 வரையிலும், கருப்பு ரகம் ரூ.131.29 முதல் ரூ.148.19 வரையிலும், சிவப்பு ரகம் ரூ.134.69 முதல் ரூ.149.69 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 57,588 கிலோ எடையுள்ள எள், ரூ.81,29,559-க்கு ஏலம் போனது.

2,077 தேங்காய்கள் சிறியவை ரூ.8.35 முதல் பெரியவை ரூ.13.69 வரையில் ரூ.23,109-க்கும், 14 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ.78.19 முதல் ரூ.97.19 வரையில் ரூ.35,053-க்கும் ஏலம் போனது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com