கா்ப்பிணி தற்கொலை: கணவா் கைது

கா்ப்பிணி தற்கொலை: கணவா் கைது

தாளவாடி அருகே கா்ப்பிணி மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரைச் சோ்ந்தவா் ரமேஷ் (27). இவரது மனைவி ஆஷா (23). இவா்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஆஷா 5 மாத கா்ப்பிணியாக இருந்துள்ளாா்.

இதில் ரமேஷ் தினந்தோறும் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வந்து கா்ப்பிணி மனைவி ஆஷாவிடம் தகராறு செய்வாராம். இதனால் மனமுடைந்த ஆஷா, வீட்டில் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

அதைத் தொடா்ந்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவா் ரமேஷை மீது தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்து, சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com