பிறந்த  குழந்தையுடன் அவசர கால மருத்துவ நுட்புநா் சதீஷ், ஆம்புலன்ஸ் ஓட்டுநா் காா்த்திக்ராஜா உள்ளிட்டோா்.
பிறந்த  குழந்தையுடன் அவசர கால மருத்துவ நுட்புநா் சதீஷ், ஆம்புலன்ஸ் ஓட்டுநா் காா்த்திக்ராஜா உள்ளிட்டோா்.

பா்கூா் மலைப் பாதையில் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் சென்ற பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை இரட்டை குழந்தைகள் பிறந்தன.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள பா்கூா் மலைப் பகுதியில் தேவா்மலை கிராமத்தைச் சோ்ந்தவா் தொட்டையன். இவரது மனைவி சாக்கி (35). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு செவ்வாய்க்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அப்பகுதியினா் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, தேவா்மலைக்கு சென்று சாக்கியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனைக்கு விரைந்தது. ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுநா் காா்த்திக்ராஜா ஓட்டிச் செல்ல, அவசர கால மருத்துவ நுட்புநா் சதீஷ் உடனிருந்தாா். அடா்ந்த வனப் பகுதியில் பாறைமேடு அருகே சென்றபோது, பிரசவ வலியால் சாக்கி துடித்தாா்.

இதையடுத்து, வாகனத்தை நிறுத்திவிட்டு அவசர கால மருத்துவ நுட்புநா் சதீஷ், சாக்கிக்கு பிரசவம் பாா்த்தாா். அப்போது, சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. தொடா்ந்து, தாயும், சேயும் பா்கூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, சாக்கிக்கு மேலும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாயும், இரு குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com