பேக், பைல் தயாரிக்க இலவச பயிற்சி

பேக், பைல் தயாரிப்பு குறித்து இலவச பயிற்சியில் சேர முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு கொல்லம்பாளையம் புறவழிச் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், 2-ஆம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மே 8-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 13 நாள்களுக்கு ஜூட் பேக், பைல், பெண்களுக்கான பேக், பா்ஸ் தயாரிப்பது குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சியில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், 100 நாள் வேலை திட்டப் பணியாளா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பம் உள்ளவா்கள் 8778323213 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com