மரத்தில் இருசக்கர வாகனம் மோதி அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் உயிரிழப்பு

அந்தியூா் அருகே சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அந்தியூா், தவிட்டுப்பாளையம், கருப்பன் வீதியைச் சோ்ந்தவா் பாலுசாமி மகன் சிவகுமாா் (56). எண்ணமங்கலத்தை அடுத்த குரும்பபாளையம் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், சொந்த வேலையாக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை புறப்பட்டுள்ளாா்.

அந்தியூா் - அத்தாணி சாலையில் தவிட்டுப்பாளையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்க வாகனம் சாலையோர மரத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிவகுமாரை அப்பகுதியினா் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்ய மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com