ஈரோடு
ஈரோட்டில் இன்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) காலை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்படும். பின்னா், காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடா்பான தங்களது பிரச்னைகள் குறித்து கருத்துகளைத் தெரிவிக்கலாம். நண்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அலுவலா்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்பட உள்ளது.
எனவே, இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.