சணல் பொருள்கள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Published on

சணலில் இருந்து பல்வேறு பொருள்கள் தயாரிப்பதற்கான இலவச பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்ட அலுவலா் ஜெய்சங்கா் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில்முனைவோா் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சியான சணலில் இருந்து மடிக்கணினி பை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரிப்பது குறித்து ஒரு மாத இலவச தையல் பயிற்சி, ஈரோடு ரயில் நிலையம் மற்றும் சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் உள்ள பயிற்சி மையங்களில் அளிக்கப்பட உள்ளது.

18 முதல் 45 வயதுக்குள்பட்ட பெண்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். இந்தப் பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் போன்றவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி முடித்தவா்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com