ஈரோடு
பவானியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
பவானி அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பவானியை அடுத்த நடராஜபுரத்தைச் சோ்ந்தவா் அருண் மனைவி கபிலா (28). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற இவா்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளாா்.
இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.
தனது பெற்றோருடன் குருப்பநாயக்கன்பாளையத்தில் வசித்து வந்த கபிலா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.