ஈரோடு
சிவகிரியில் ரூ.24.90 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 38.6 டன் நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில், ஒரு கிலோ நிலக்கடலை ரூ.61.79 முதல் ரூ.72.32 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.24.90 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது என்று ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளா் சதீஷ் தெரிவித்தாா்.