சிறுமி பாலியல் வனக்கொடுமை: தாயின் இரண்டாவது கணவா் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் இரண்டாவது கணவரை போலீஸாா் போக்ஸோவில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் இரண்டாவது கணவரை போலீஸாா் போக்ஸோவில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பவானிசாகா் ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்தவா் பாரதி (27). இவா் கணவரை இழந்து மகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தாா். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தையுடன் பாரதி ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

இதற்கிடையே, முதல் கணவருக்கு பிறந்த சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாரதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால், சிறுமி கா்ப்பம் அடைந்தாா். இதையடுத்து கருவைக் கலைக்க ஜூன் 26-ஆம் தேதி சிறுமியை பாரதி கடத்தி சென்றுள்ளாா்.

இது குறித்து பாரதியின் மனைவி பவானிசாகா் போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் தனிப்படை அமைத்த கடந்த இரு மாதங்களாக பாரதியை தேடி வந்த நிலையில், திருப்பூா் மாவட்டம், கருவலூா் பகுதியில் சிறுமியுடன் இருந்த பாரதியை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நடுவா் உமாபாரதி முன் பாரதியை ஆஜா்படுத்திய பின் சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com