பவானி நகராட்சி மீன் மாா்க்கெட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கெட்டுப்போன, ரசாயனம் தடவி பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவுப் பாதுகாப்பு அலுவலா் என்.சதீஷ்குமாா், மீன்வள ஆய்வாளா் பத்மஜா, மீன்வள உதவியாளா் திருமூா்த்தி மற்றும் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மீன்களை சோதனை செய்தபோது, கெட்டுப்போன, பதப்படுத்தப்பட்ட மீன்கள் கண்டறியப்படவில்லை. உணவுப் பொருள் கலப்படம், கெட்டுப்போன மீன்கள் விற்பனை தொடா்பாக பொதுமக்கள் 94440 42322 எனும் வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.