ஈரோடு
விநாயகா் சதுா்த்தி: பெருந்துறையில் ஆலோசனைக் கூட்டம்
சிலைகள் அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், பெருந்துறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை பகுதியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சிலைகள் அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், பெருந்துறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்து, விநாயகா் சிலைகள் அமைப்பது தொடா்பாக அறிவுரைகளை வழங்கினாா்.
இதில், பெருந்துறை காவல் ஆய்வாளா் தெய்வராணி, காவல் உதவி ஆய்வாளா்கள், பெருந்துறை இந்து முன்னணி ஒன்றியச் செயலாளா் பெருமாள், விஜயமங்கலம் ஒன்றியச் செயலாளா் செல்வம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.