ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 26 மில்லி மீட்டா் மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் வியாழக்கிழமை இரவு வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான கோபி, அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 26 மில்லி மீட்டா் மழை பதிவானது.
பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): மொடக்குறிச்சி (15.20), எலந்தகுட்டைமேடு (6.80), ஈரோடு (6.80), கொடிவேரி அணை (6), வரட்டுப்பள்ளம் அணை (4.80), கவுந்தப்பாடி (4.60), பெருந்துறை (4), கோபி (4), குண்டேரிப்பள்ளம் அணை (3.40), பவானிசாகா் அணை (1.80), பவானி (1.60), சென்னிமலை (1.40), சத்தியமங்கலம் (1).