எடை தராசுக்கு போலியான முத்திரை சான்று தயாரித்த இளைஞா் கைது

சத்தியமங்கலம் நகைக் கடைக்கு போலி தராசு முத்திரை சான்றிதழ் வழங்கிய இளைஞரை சத்தியமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

சத்தியமங்கலம் நகைக் கடைக்கு போலி தராசு முத்திரை சான்றிதழ் வழங்கிய இளைஞரை சத்தியமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலத்தில் உள்ள நகைக் கடைக்கு எடை தராசுக்கு முத்திரை சான்றிதழ் பெற அரசுக்கு உரிய கட்டணம் செலுத்தி, ஆண்டுதோறும் தராசு புதுப்பித்து சான்று பெற்றிருக்க வேண்டும். இதனை வணக நிறுவனங்கள் சரியான முறையில் கடைப்பிடிப்பது குறித்து தொழிலாளா் நலன் உதவி ஆய்வாளா் லோகநாதன் சத்தியமங்கலத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் எடை தராசு முத்திரை புதுப்பித்தல் சான்றுகள ஆய்வு செய்தாா்.

அப்போது, வணிக நிறுவனம் ஒன்றில் 2024-ஆம் ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பிக்காமல் போலி உரிமம் புதுப்பித்தல் சான்று வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலி சான்றிதழ் வழங்கி நபா் குறித்து சத்தியமங்கலம் போலீஸில் லோகநாதன் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி போலி சான்று அளித்த கோபியைச் சோ்ந்த தீபக் விஜய் (24) என்பவரைக் கைது செய்து சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com