அந்தியூா் பெரிய ஏரியில் ரூ.50 லட்சத்தில் படகு குழாம் அமைப்பு

அந்தியூா் பெரிய ஏரியில் சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் படகு குழாம் அமைக்கப்படுகிறது.
அந்தியூா் பெரிய ஏரியில் ரூ.50 லட்சத்தில் படகு குழாம் அமைப்பு

அந்தியூா் பெரிய ஏரியில் சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் படகு குழாம் அமைக்கப்படுகிறது. இப்பணியினை தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் சு.முத்துசாமி தொடக்கி வைத்தாா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா். இந்த படகு குழாமில் நடைபாதை, புல்தரை, பளிங்கு கல் இருக்கைகள், தடுப்பு சுவா் அமைத்தல், சிற்றுண்டியகம், பயணச்சீட்டு வழங்கும் இடம், மிதிக்கும் படகு நிறுத்தம் மற்றும் படகு நிறுத்தம் செல்ல வழித்தட படிக்கட்டுகள் ஆகியவை அமைக்கப்படுகிறது. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் நவமணி கந்தசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலா் மணி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி, பேரூா் திமுக செயலாளா் எஸ்.கே.காளிதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com