அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானைகள்

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் அருகே அரசுப் பேருந்தை யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.
அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானைகள்

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் அருகே அரசுப் பேருந்தை யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழியாக தமிழக கா்நாடக மாநிலங்களை இணைக்கும் அரேப்பாளையம் - கொள்ளேகால் சாலை அமைந்துள்ளது. அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சாலையில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது.

இந்நிலையில், அரேப்பாளையம் - கொள்ளேகால் சாலையில், ஆசனூா் அருகே மாவள்ளம் பிரிவில் யானைகள் குட்டிகளுடன் புதன்கிழமை உலா வந்தன. மேலும், அவ்வழியே சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து நின்றன. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனா்.

சிறிதுநேரம் அந்தச் சாலையில் உலாவிய யானைகள் பின்னா் வனப் பகுதிக்குள் சென்றன. அதன்பின், அரசுப் பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com