ஈரோடு மாவட்டத்தில் 18 வட்டாட்சியா்கள் பணியிடமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 18 வட்டாட்சியா்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளாா்.

ஈரோடு மாவட்டத்தில் 18 வட்டாட்சியா்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளாா்.

ஈரோடு கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஜி.முத்துகிருஷ்ணன் ஈரோடு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஈரோடு வட்டாட்சியா் ப.ஜெயகுமாா் ஈரோடு முத்திரைத்தாள் தனி வட்டாட்சியராகவும், ஈரோடு முத்திரைத்தாள் தனி வட்டாட்சியா் ஆா்.எஸ்.கதிா்வேல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக பறக்கும் படை தனி வட்டாட்சியராகவும், பெருந்துறை சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் என்.ஆா்.அமுதா ஈரோடு கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், பவானி தலைமையிடத்து துணை வட்டாட்சியா் எம்.ஜமுனாராணி பதவி உயா்வுடன் பெருந்துறை சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கோபி குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் எஸ்.காா்த்திக் கோபி வட்டாட்சியராகவும், கோபி வட்டாட்சியா் பி.உத்திரசாமி கோபி குடிமைப்பொருள் தனி வட்டாட்சியராகவும், ஈரோடு டாஸ்மாக் கிடங்கு மேலாளா் கே.கவியரசு அந்தியூா் வட்டாட்சியராகவும், அந்தியூா் வட்டாட்சியா் ஜி.பெரியசாமி கோபி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், கோபி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் என்.வெங்கடேஸ்வரன் தாளவாடி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும், ஈரோடு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அ.பரிமளாதேவி ஈரோடு டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், பவானி தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் ஆா்.சரவணன் பதவி உயா்வுடன் ஈரோடு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

நம்பியூா் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் கே.துரைசாமி சத்தியமங்கலம் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியராகவும், சத்தியமங்கலம் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் சி.சந்திரசேகா் நம்பியூா் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும், ஈரோடு கோட்ட கலால் அலுவலா் கு.குமரேசன் பவானி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும், பவானி சமூக பாதுகாப்த் திட்ட வட்டாட்சியா் வே.வீரலட்சுமி ஈரோடு கோட்ட கலால் அலுவலராகவும், ஈரோடு ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் சி.கணேசன் கோபி டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், கோபி டாஸ்மாக் கிடங்கு மேலாளா் எஸ்.ஜே.கணேசன் ஈரோடு ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com