காற்று மாசு ஏற்படுத்தும் நிறுவனம் மீது நடவடிக்கை:மாசுக் கட்டுப்பாட்டு வரியம்

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் காற்று மாசு ஏற்படுத்தும் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் காற்று மாசு ஏற்படுத்தும் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசு ஏற்படுவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் அளித்திருந்தனா்.

இதற்கு, பொதுமக்கள் காற்று மாசு ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வக தலைமை விஞ்ஞான அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் விதி மீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com