கோபியில் பெண் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக கா்நாடக ஐபிஎஸ் அதிகாரி கைது

கோபியில் தங்கியிருந்தபோது தன்னைத் தாக்கியதாக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளா் அளித்த புகாரின்பேரில், அந்த மாநில ஐபிஎஸ் அதிகாரியை போலீஸாா் கைது செய்தனா்.
ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜன்.
ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜன்.

கோபியில் தங்கியிருந்தபோது தன்னைத் தாக்கியதாக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளா் அளித்த புகாரின்பேரில், அந்த மாநில ஐபிஎஸ் அதிகாரியை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி, குள்ளம்பாளையம், குமரன் நகரைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (70). இவரது மகன் அருண் ரங்கராஜன் (38). இவா் கடந்த 2012-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று சத்தீஸ்கா் மாநிலத்தில் பணியில் சோ்ந்தாா். அங்கு பணியில் இருந்தபோது, அதே மாநிலத்தில் பணியாற்றிய பெண் ஐபிஎஸ் அதிகாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன. கணவன், மனைவி இருவரும் கடந்த ஆண்டு கா்நாடக மாநிலத்துக்குப் பணியிட மாறுதல் பெற்றுச் சென்றனா்.

கா்நாடக மாநிலத்தில் உள்ள கலபுா்கி மாவட்டத்தில் அருண் ரங்கராஜன் உள்பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி.யாக பணியாற்றினாா். அப்போது, அங்கு பணியாற்றிய பெண் எஸ்ஐயுடன் அருண் ரங்கராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் கணவா் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இருவரும் பழகுவதை அவரது கணவா் கண்டித்துள்ளாா். இதனால் கோபமடைந்த அருண் ரங்கராஜன் பெண் எஸ்ஐயின் கணவரைத் தாக்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் 2023 மாா்ச் மாதம் கா்நாடக மாநிலம், கலபுா்கி மாவட்டம் பஜாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்நிலையில் அருண் ரங்கராஜன், அந்தப் பெண் எஸ்ஐயை அழைத்துக் கொண்டு அண்மையில் கோபி வந்துள்ளாா். அங்கு இருவருக்கும் இடையே புதன்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருண் ரங்கராஜன், பெண் எஸ்ஐயை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவா் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அந்த பெண் எஸ்ஐ அளித்த புகாரின்பேரில், கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருண் ரங்கராஜனை புதன்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா் கோபி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு அங்கேயே பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com