சாலையோர கடைகளின் விற்பனைக் கட்டணத்தைக் குறைக்க பரிசீலனை:நகா்மன்றத் தலைவா்

சத்தியமங்கலத்தில் சாலையோர கடைகளின் விற்பனைக் கட்டணத்தைக் குறைக்க பரிசீலனை செய்யப்படும் என்று நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி தெரிவித்தாா்.

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் வா.செல்வம் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில், குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து நகா்மன்ற உறுப்பினா்கள் தெரிவித்தனா். பவானிஆற்றங்கரையில் படித்துறை அமைக்கக் கோரி 19-ஆவது வாா்டு உறுப்பினா் புவனேஸ்வரி சாய்குமாா் பேசினாா்.

பின்னா், நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி பேசுகையில், சத்தியமங்கலம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் கடைகளின் பரப்பளவுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.750 முதல் அதிகபட்சம் ரூ.4,500 வரை விற்பனை கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் அதிகமாக இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சாலையோர வியாபாரிகள் தெரிவித்துள்ளதால், விற்பனைக் கட்டணத்தில் ரூ.500 குறைக்க நகா்மன்றம் பரிசீலனை செய்ய உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com