சென்னிமலையில் 611 பயனாளிகளுக்கு ரூ.5.40 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சென்னிமலையில் 611 பயனாளிகளுக்கு ரூ.5.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.
சென்னிமலையில் 611 பயனாளிகளுக்கு ரூ.5.40 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சென்னிமலையில் 611 பயனாளிகளுக்கு ரூ.5.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

சென்னிமலையில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.3.56 கோடி மதிப்பிலான புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மக்கள் சேவை முகாம் மூலம் தோ்வு செய்யப்பட்ட 611 பயனாளிகளுக்கு ரூ.5.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிபிடாரியூா் ஊராட்சி குமாரபுரியில், முருங்கத்தொழுவு மற்றும் எக்கட்டாம்பாளையம் ஆகிய 3 கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.3.56 கோடி மதிப்பிலான 38 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சா் பெற்றுக் கொண்டாா்.

இதில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், சென்னிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரி, சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி, பெருந்துறை வட்டாட்சியா் பூபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com