புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு கால்நடைகள் விற்பனை

புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தையில் 700-க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ.ஒரு கோடிக்கு விற்பனையாயின.
புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு கால்நடைகள் விற்பனை

புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தையில் 700-க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ.ஒரு கோடிக்கு விற்பனையாயின.

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும். ஈரோடு, கோவை, திருப்பூா் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்கவும், விற்கவும் வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை கூடிய சந்தைக்கு எருமைகள், கலப்பின மாடுகள், கன்றுகள், ஜொ்சி ரக மாடுகள் என 700-க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

எருமைகள் ரூ.35 ஆயிரம், கறுப்பு வெள்ளை மாடு ரூ.42 ஆயிரம், ஜொ்சி ரக மாடு ரூ.48 ஆயிரம், சிந்து ரக மாடு ரூ.42 ஆயிரம், நாட்டுமாடு ரூ.72 ஆயிரம் வரை விற்பனையாயின. மேலும், வளா்ப்புக் கன்றுகள் ரூ.6,000 முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையாயின. கா்நாடக மற்றும் கேரள மாநில வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச் சென்றனா்.

அதிகாலை சந்தை தொடங்கிய நிலையில் கொண்டு வரப்பட்ட அனைத்து கால்நடைகளும் 5 மணி நேரத்தில் ரூ.ஒரு கோடிக்கு விற்பனையானதாகவும்,

இந்த வாரம் கறவை மாடு, கன்றுகளை வாங்க விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டியதால் சந்தையில் கால்நடை ஒன்றுக்கு விலை ரூ.3000 வரை அதிகரித்து விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com