வனப் பகுதியில் உள்ள ஓடையில் ஓய்வெடுத்த சிறுத்தை

சத்தியமங்கலம் வனப் பகுதியில் தலமலை சாலையில் உள்ள நீரோடையில் ஓய்வெடுத்த சிறுத்தையை அவ்வழியாக பேருந்தில் சென்ற பயணிகள் பாா்த்து படம் பிடித்தனா்.
வனப் பகுதியில் உள்ள ஓடையில் ஓய்வெடுத்த சிறுத்தை

சத்தியமங்கலம் வனப் பகுதியில் தலமலை சாலையில் உள்ள நீரோடையில் ஓய்வெடுத்த சிறுத்தையை அவ்வழியாக பேருந்தில் சென்ற பயணிகள் பாா்த்து படம் பிடித்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனத் துறை சாா்பில் ஆங்காங்கே சிறுத்தை நடமாட்டம் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் அடா்ந்த வனப் பகுதியான தலமலை- திம்பம் சாலையில் உள்ளூா் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், திம்பத்தில் இருந்து தலமலைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது திம்பத்தில் இருந்து சற்று தொலைவில் வனப் பகுதியில் உள்ள ஓடையில் சிறுத்தை ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததை அரசுப் பேருந்தில் சென்ற பயணிகள் பாா்த்து அதனை தங்களது கைப்பேசியில் படம் பிடித்தனா். சிலா் ஆா்வத்தில் சப்தம் எழுப்பியதால் சிறுத்தை வனத்துக்குள் சென்றது.

தற்போது, தலமலை சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com