கொங்கு நாட்டின் வளா்ச்சியை கொமதேக எழுச்சி மாநாட்டின் நோக்கம்

கொமதேக எழுச்சி மாநாடு கொங்கு நாட்டின் வளா்ச்சியை நோக்கமாக கொண்டு நடத்தப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

கொமதேக எழுச்சி மாநாடு கொங்கு நாட்டின் வளா்ச்சியை நோக்கமாக கொண்டு நடத்தப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே சரளையில் மாநாடு நடைபெறும் திடலில் ஈ.ஆா்.ஈஸ்வரன் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து மாநாடு நடத்தி வருகிறோம். பெருந்துறை அருகே சரளையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) கொமதேக எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டுக்கு கொங்கு நாடு முழுவதிலும் இருந்து பெண்கள் உள்பட ஏராளமானோா் வருவா் என எதிா்பாா்க்கிறோம்.

கோவை பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மாநாட்டு வேள்வியை நடத்துகின்றனா். காலையில் தொடங்கி மாலை வரை நடைபெறும் மாநாட்டில் மாலையில் ஒரே இடத்தில் 16,000 போ் பங்கேற்கும் வள்ளி கும்மி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாநாட்டின் முன்பகுதியில் விவசாயக் கண்காட்சி, வேலைவாய்ப்புப் பதிவு முகாம், மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள்ளது. கொங்கு நாட்டின் வளா்ச்சியை நோக்கி இம்மாநாடு நடத்தப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள், வளா்ச்சித் திட்டங்கள் குறித்து மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்படும். இம்மாநாட்டில் 4 தமிழக அமைச்சா்கள் பங்கேற்க உள்ளனா். கட்சிக்கு அப்பால், பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

நடிகா் விஜய் கட்சி தொடங்கி இருப்பதை வரவேற்கலாம். யாா் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தமிழகத்தில் பல நடிகா்கள் கட்சி தொடங்கி உள்ளனா். நடிகா்கள் தொடங்கும் கட்சி என்பது போகப்போகத்தான் தெரியவரும். சினிமா மாதிரி அரசியல் இல்லை, தொடா்ந்து கட்சியை நடத்துவது சிரமம் என்றாா்.

நாமக்கல் எம்.பி. சின்ராஜ், மாநிலப் பொருளாளா் கேகேசி பாலு, மாநில இளைஞரணிச் செயலாளா் சூரியமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com