மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தனியாா் பள்ளி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தனியாா் பள்ளி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

இதுகுறித்து ஈரோடு சுதா மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் சுதாகா் கூறியதாவது:

கரூா் மாவட்டம், பவித்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் பூபதி (37). இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா். இவா் திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஜனவரி 29-ஆம் தேதி சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்தாா்.

ஈரோட்டில் உள்ள சுதா பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூபதிக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில், பூபதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.

இதையடுத்து பூபதியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முன் வந்தனா். இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு உடல் உறுப்பு தான மையத்தின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியுடன், பூபதியின் உடலில் இருந்து இரண்டு கண்கள், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், தோல், எலும்பு ஆகியவற்றை மருத்துவா் குழுவினா் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி தானமாக பெற்றனா்.

பின்னா் அவரது கல்லீரல், ஒரு சிறுநீரகம், தோல், எலும்புகள் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் இரண்டு கண்கள் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com