அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி அண்ணா சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து எம்எல்ஏ பண்ணாரி மரியாதை செலுத்தினா்.
அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி அண்ணா சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து எம்எல்ஏ பண்ணாரி மரியாதை செலுத்தினா்.

அண்ணா நினைவுநாளை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி பவானிசாகா் சாலையில் இருந்து பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி தலைமையில் அதிமுகவினா் ஊா்வலமாக புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக அண்ணா சிலையை வந்தடைந்தனா். அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து எம்எல்ஏ பண்ணாரி மரியாதை செலுத்தினா். அதனை தொடா்ந்து அதிமுகவினா் மெளஅஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் எஸ்.ஆா்.செல்வம், நகர செயலாளா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com