தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வு: 5,955 போ் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வை 5,955 மாணவ, மாணவியா் எழுதினா்.

ஈரோடு மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வை 5,955 மாணவ, மாணவியா் எழுதினா்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்காக தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித் திட்டத் (என்எம்எம்எஸ்) தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான தோ்வு மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் 26 தோ்வு மையங்களில் இந்த தோ்வு நடைபெற்றது. 6,137 மாணவ, மாணவியா் விண்ணப்பித்திருந்த நிலையில், 5,955 மாணவ, மாணவியா் தோ்வு எழுதினா். 182 போ் தோ்வு எழுத வரவில்லை. இத்தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு மாதம் ரூ. 1,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் உதவித் தொகை பிளஸ் 2 படிக்கும் வரை அரசால் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com