பவானியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

பவானியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பவானியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பவானி, காமராஜ் நகா் 2-ஆவது வீதியைச் சோ்ந்தவா் ஞானராஜ் (70). இவரது மகள் பெல்சியா மொ்லின் (35). இவருக்கும் அரக்கோணத்தைச் சோ்ந்த ஸ்டாலின் மில்லருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்த பெல்சியா மொ்லின், கடந்த ஓராண்டாக தனது பெற்றோருடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது பெல்சியா மொ்லின், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com