ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 18 அடி உயரமுள்ள 14 டன் சிவலிங்கம் பிரதிஷ்டை

sy04siva_0402chn_139_3
sy04siva_0402chn_139_3

சத்தியமங்கலம், பிப்.4: சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையுள்ள 18 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் சிலை ஞாயிற்றுக்கிழமை பிரஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தனவாசி கரடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஏற்கெனவே சிவனடியாா்கள் தானம் கொடுத்த ஏராளமான சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆலயத்தில் 14 டன் எடையில் 18 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவலிங்கம் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கிரேன் மூலம் சிவலிங்கத்தின் பீடம் மற்றும் லிங்கம் நிலை நிறுத்தும் பணி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்துக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு மலா் மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கருப்புசாமி சிவனடியாா் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Image Caption

சத்தியமங்கலத்தை அடுத்த  தனவாசி  கரடு  பகுதியில்  பிரதிஷ்டை  செய்யப்பட்ட  18  அடி  உயர  சிவலிங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com